ADDED : ஜன 08, 2024 05:14 AM

விருதுநகர் : விருதுநகரில் மக்காச்சோள அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 900 எக்டேருக்கு மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பயிரிடப்படும் மானாவாரி பயிராக மக்காச்சோளம் உள்ளது. இந்நிலையில் ஆவணிப்பட்டம், புரட்டசி பட்டத்தில் நடவு செய்யப்படும் மக்காச்சோளம் இந்தாண்டு ஆகஸ்டில் பெய்த மழைக்காரணமாக முன்பே பயிரிடப்பட்டது.
அதற்கான அறுவடை தற்போது துவங்கி உள்ளது. விருதுநகரில் பெரியபேராலி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இதே போல் பயிரிடப்பட்ட சிறுதானிய வகைகளான கம்பு, குதிரைவாலி போன்றவையும் அறுவடை பருவத்திற்கு தயாராகி வருகின்றன.


