/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விருந்து ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விருந்து
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விருந்து
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விருந்து
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விருந்து
ADDED : ஜூன் 08, 2025 11:17 PM

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறி விருந்து நடந்தது.
திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் மந்தகுமாரசுவாமி கோயில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் விழா நடந்தது. மந்தகுமார சுவாமிக்கு பொங்கல் வைத்து அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு நேர்த்தி கடனாக செலுத்திய 140 க்கும் மேற்பட்ட கிடாய்களை சுவாமிக்கு பலியிட்டு உணவாக சமைத்து காலை முதல் பக்தர்களுக்கு கறி விருந்து நடந்தது.
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த அன்னதான நிகழ்ச்சியில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மாறாக வயதான பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கறி விருந்தில் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காத்திருந்து உணவு உண்டனர். இதில் யாரும் மது அருந்தி விருந்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பல்லாண்டு காலமாக பாரம்பரியமாக இந்த கறி விருந்து நடைபெற்று வருகிறது.