Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிறுமி திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை: திருமணத்துக்கு பிந்தைய வாழ்வின் பாதிப்புகள்

சிறுமி திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை: திருமணத்துக்கு பிந்தைய வாழ்வின் பாதிப்புகள்

சிறுமி திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை: திருமணத்துக்கு பிந்தைய வாழ்வின் பாதிப்புகள்

சிறுமி திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை: திருமணத்துக்கு பிந்தைய வாழ்வின் பாதிப்புகள்

ADDED : ஜூன் 13, 2024 05:11 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் சிறுமி திருமணங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மேலும் திருமணத்துக்கு பிந்தைய வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளை இடை நிற்றல் செய்து திருமணம் செய்து வைப்பது அதிகரித்து உள்ளது. பெண்ணின் திருமண வயது 18. ஆனால் மாவட்டத்தில் பெருமான்மையான பகுதிகளில் சிறுமி திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

இது போன்று திருமணங்களுக்கு குடும்ப சூழ்நிலை ஒரு காரணமாக இருந்தாலும், தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. சரியான வயதுக்கு முன்பே பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதால், அவர்கள் மட்டுமின்றி பிறக்கும் குழந்தைகள், குடும்பங்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.

இதனால் பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும், மருத்து ரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சிறுமிகளுக்கு கர்ப்பபை முழு வளர்ச்சி அடையாததால் திருமணத்துக்கு பின் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். இது உடல் நலத்தை பாதித்து, பலவீனமடைந்து, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

மேலும் பிரசவத்தின் போது குழந்தை பிறப்பில் சிக்கல், குழந்தை இறந்து பிறத்தல், தாய், சேய் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது போன்ற பிரசவத்தில் எடை குறைவான, குறை பாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கும். திருமணத்திற்கான மனம், உடல் அளவில் முழுமையடையும் முன்பே திருமணம் செய்வதால் தாய், பிறக்கும் சேய் இருவருக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுத்தாலும் திருமணங்கள் நடப்பது தொடர் கதையாகவே உள்ளது.

மாவட்டத்தில் மே 1 முதல் 31 வரை மட்டும் 21 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறபட்ட தகவலின் அடிப்படையில் 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமி திருமணங்கள் குறித்தும், திருமணத்துக்கு பிந்தைய வாழ்வின் பாதிப்புகள் குறித்தும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு வழங்கி தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us