/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அகில இந்திய ஹாக்கி போட்டி நியூ டெல்லி அணி வெற்றி அகில இந்திய ஹாக்கி போட்டி நியூ டெல்லி அணி வெற்றி
அகில இந்திய ஹாக்கி போட்டி நியூ டெல்லி அணி வெற்றி
அகில இந்திய ஹாக்கி போட்டி நியூ டெல்லி அணி வெற்றி
அகில இந்திய ஹாக்கி போட்டி நியூ டெல்லி அணி வெற்றி
ADDED : ஜூன் 03, 2025 12:34 AM

சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி அணி வென்றது.
கே.ஆர். மருத்துவம், கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகடாமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஹாக்கி போட்டிகள் மே 23 இல் துவங்கி ஜூன் 1 வரை நடந்தது. இறுதி போட்டியில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றது.
2ம் இடம் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி ரூ.1 லட்சம் ரொக்கம் பெற்றது. 3ம் இடம் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, ஹாக்கி கோப்பை வழங்கப்பட்டது. போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் அருணாச்சலம், முன்னாள் ஹாக்கி அணி இந்திய வீரர் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.