/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவுநீர் மக்கள் அவதி சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவுநீர் மக்கள் அவதி
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவுநீர் மக்கள் அவதி
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவுநீர் மக்கள் அவதி
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவுநீர் மக்கள் அவதி
ADDED : ஜூன் 15, 2025 06:42 AM
சாத்துார் : சாத்துார் நான்கு வழிச்சாலை கிழக்கு சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் தற்போது பாலம் அமைப்பதற்கான ஆயத்தவேலைகள் நடந்து வருகிறது. இதற்காக சர்வீஸ் ரோட்டில் இருபுறமும் வளர்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு ஓரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளும் அகற்றப்பட்டுள்ளது. கிழக்கு பக்க சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமித்திருந்த கடைகள், மரங்கள் மேம்பாலம் காட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்கள் வேரோடு பெயர்த்து எடுக்க மண் தோண்டப்பட்டது.
இந்த மண் முழுவதும் தற்போது சர்வீஸ் ரோட்டில் அமைந்திருந்த மழை நீர் வடிகாலில் சரிந்து விழுந்து உள்ளது. இதன் காரணமாக மழை நீர் வடிகால் வழியாக செல்லாமல் கிழக்குப் பக்க சர்வீஸ் ரோடு முழுவதும் கழிவுநீர் பரவி தேங்கி நிற்கிறது.
தற்போது கிழக்கு பக்க சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த பகுதியில் கழிவுநீர் செல்லாமல் சர்வீஸ் ரோட்டில் தேங்கியிருப்பதால் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சர்வீஸ் ரோட்டில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.