/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிருஷ்ணன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு கிருஷ்ணன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 04, 2025 12:38 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் கிருஷ்ணன்கோவிலில் ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி, ரோடுகளை விரிவுபடுத்தி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளது இப்பகுதி மக்கள் கிருஷ்ணன் கோவில் வந்து பல்வேறு நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.
மேலும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாநில மாணவர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
மேலும் சதுரகிரிக்கு செல்லும் வெளி மாவட்ட பக்தர்களும் கிருஷ்ணன் கோவிலில் இறங்கி தாணிப்பாறை செல்கின்றனர்.
இதனால் கிருஷ்ணன் கோவிலில் காலை, மாலை வேலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் பஸ்சிற்காக காத்திருக்கும் மக்களுக்கு சுகாதார வளாகம், இருக்கை வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை வசதிகள் போதுமானதாக இல்லை.
எனவே அதிகளவில் வெளியூர் மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதற்கு கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி, தற்போது ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் போல் ஒரு பஸ் ஸ்டாண்ட்டை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.