ADDED : செப் 04, 2025 04:02 AM
கல்லுாரி மாணவன் மாயம்
சாத்துார், செப். 4-
சாத்துார் என். மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் சுடலைமுத்து இவர் மகன் சூர்யகுமார், 19. சிவகாசியில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். செப்.1 கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல் இருவர் கைது
சாத்துார், செப். 4 -
சாத்துார் இறவார் பட்டியை சேர்ந்தவர் ராமர், 49.விஜய கரிசல் குளத்தை சேர்ந்தவர் கண்ணன் ,37. இருவரும் தங்கள் வீடுகள் அருகில் தகர செட் அமைத்து சரவெடி பட்டாசு தயாரித்தனர்.ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.