ADDED : அக் 24, 2025 02:28 AM
இளம் பெண் மாயம்
சிவகாசி: டி.கான்சாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கன்னி லட்சுமி 31. இவரது கணவர் மாடசாமி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மாடசாமி கோயமுத்துாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கன்னிலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
----சிறுமி மாயம்
சிவகாசி : சிவகாசியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பழகி வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


