Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்

சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்

சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்

சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்

ADDED : அக் 05, 2025 04:22 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி வார உற்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திருவண்ணாமலை அடிவாரத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

இதனையடுத்து புதிய கிரீடம் அணிந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசிக்க அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 4:00 மணிக்கு பெருமாள் கருட சேவை கிரிவலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செண்பகத் தோப்பு காட்டழகர் கோயிலிலும் நேற்று வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விடியல் பஸ்களில் இலவச பயணம் இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு போக்குவரத்துக் கழகம் கடந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில், பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் இலவச பஸ்களில் சிறப்பு பஸ்கள் என ஸ்டிக்கர் ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் கட்டணம் வசூலித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் விடியல் பஸ்களை இயக்கி அரசு போக்குவரத்து கழகம் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us