/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விளாம்பட்டி கண்மாய் உடைந்து ரோட்டில் பெருக்கெடுத்த மழைநீர்; குடியிருப்புக்குள்ளும் புகுந்ததால் மறியல்விளாம்பட்டி கண்மாய் உடைந்து ரோட்டில் பெருக்கெடுத்த மழைநீர்; குடியிருப்புக்குள்ளும் புகுந்ததால் மறியல்
விளாம்பட்டி கண்மாய் உடைந்து ரோட்டில் பெருக்கெடுத்த மழைநீர்; குடியிருப்புக்குள்ளும் புகுந்ததால் மறியல்
விளாம்பட்டி கண்மாய் உடைந்து ரோட்டில் பெருக்கெடுத்த மழைநீர்; குடியிருப்புக்குள்ளும் புகுந்ததால் மறியல்
விளாம்பட்டி கண்மாய் உடைந்து ரோட்டில் பெருக்கெடுத்த மழைநீர்; குடியிருப்புக்குள்ளும் புகுந்ததால் மறியல்
ADDED : பிப் 01, 2024 11:53 PM

சிவகாசி : சிவகாசி பகுதியில் நள்ளிரவு முதல் பெய்த மழையால் விளாம்பட்டி கண்மாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. காமராஜர் காலனியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி சுற்றுப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்த நிலையில் அம்மாபட்டி, ஊராம் பட்டி கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறி விளாம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. இந்தக் கண்மாயும் நிறைந்த நிலையில் தண்ணீர் வெளியேறி விளாம்பட்டியில் சிவகாசி ஆலங்குளம் ரோட்டில் முழங்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மெயின் ரோட்டில் உள்ள ஓடை முழுமையாக நிறைந்து வெளியேறி ரோட்டில் ஓடி கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. காமராஜர் காலனியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
காமராஜர் காலனி வழியே செல்லும் ஓடையில் விளாம்பட்டி கண்மாய் நிறைந்தால் தண்ணீர் செல்லும். ஆனால் ஓடையில் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு விட்டது.
இதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விட்டது. மேலும் அருகில் உள்ள கிடாக்குளம் கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாததால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் தடுப்புச் சுவர் அமைக்க கோரியும் ஓடையை துார்வார கோரியும் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாரனேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். தொடர்ந்து காமராஜர் காலனியைச் சேர்ந்த மக்கள் சிவகாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையில் இதேபோன்று காமராஜர் காலனியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.


