/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுருங்கி வரும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு சுருங்கி வரும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு
சுருங்கி வரும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு
சுருங்கி வரும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு
சுருங்கி வரும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு
ADDED : ஜூன் 08, 2025 11:13 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் - வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலைக்கு மாறி உள்ளது.
ராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே மேம்பாலம் அடுத்து வெம்பக்கோட்டை ரோட்டில் சத்திரப்பட்டி, கீழ ராஜகுலராமன், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்பு ரோடாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாலையை மாநிலச்சாலையாக தரம் உயர்த்தினர்.
இதன்படி ரயில்வே மேம்பாலம் முதல் பொன்னகரம் வரை அதிக குடியிருப்புகளும், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள் உள்ள 1.5 கி.மீ தொலைவு போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் இருந்த நிழல் தரும் மரங்களை அகற்றி வாகனங்கள் முந்துவதை தவிர்க்க சென்டர் மீடியன் அமைத்தனர். இதன் பலனாக மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் கடைகளின் தாழ்வாரங்கள், வாகன நிறுத்தம் , மண்மேடிட்டு அடைப்பு, கடைகளின் விளம்பர பலகை என சாலையின் அகலமே சுருங்கிவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க வழியின்றி பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் இன்னலுக்கு உள்ளாவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இப்பகுதி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டை ஒட்டியே வாகனங்களை நிருத்தி செல்வதால் மேலும் சிக்கல் ஏற்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சாலையின் வெள்ளைக்கோடு என்பதே தெரிவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலமான சாலையை மீட்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.