ADDED : ஜூன் 08, 2025 11:16 PM
விருதுநகர்: விருதுநகர் அருகே மெட்டுக்குண்டில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.
விருதுநகர் மெட்டுக்குண்டில் பட்டாசு தீ விபத்தில் அருப்புக்கோட்டை குல்லுார்சந்தை தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி 45,க்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.