ADDED : ஜன 28, 2024 07:09 AM
அருப்புக் கோட்டை : குடியரசு தின விழாவையொட்டி திருச்சுழி கிளை நூலகத்தில் பேராசிரியர் வீரக்குமார் தேசிய கொடியேற்றினார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் வரவேற்றார். நூலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
* அருப்புக்கோட்டை புளியம்பட்டி கம்மவார் ராமானுஜர் நடுநிலைப் பள்ளி உறவின்முறை தலைவர் ரங்கசாமி கொடியேற்றினார். நிர்வாக குழு தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். ஜெயக்குமாரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். கவுன்சிலர் தனலட்சுமி சிறப்புரையாற்றினார். ஆசிரியை சுசிலா நன்றி கூறினார்.
* தேவாங்கர் கலை கல்லூரியில் முதல்வர் உமாராணி கொடியேற்றினார். என்.சி.சி., என்எஸ்எஸ் ., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.சி.சி .,லெப்டினன்ட் சுப்புராஜ், உடற்கல்வி இயக்குனர் ஹரிகிருஷ்ணன், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி செய்தனர்.
* அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் சி.எஸ்.டி., நடுநிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் கிருபாராஜ்குமார் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை ஏஞ்சலின் அருள் சாந்தி வரவேற்றார். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் ஹெப்சி பாய் எலிசபெத், ஆசிரியைகள் செய்தனர்.
* பாலையம்பட்டி பி பி வி.,சாலா பள்ளியில் செயலர் பிரேம்குமார் கொடியேற்றினார். தலைமையாசிரியைகள் தமிழ்ச்செல்வி, லதா முன்னிலை வகித்தனர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
* அருப்புக்கோட்டை அருகே புலியூரான் நாடார் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலாஜி கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பள்ளிச் செயலர் சந்திரசேகரன் கொடியேற்றினார். பள்ளி செயலர் மணி முருகன் தலைமை வகித்தார். தலைவர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.- -
* சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் இணைச் செயலாளர் சீனிவாசன் தேசியக் கொடி ஏற்றினார். முதல்வர் கணேஷ் ராம் வரவேற்றார் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடந்தது. தமிழ் துறை பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.