Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாநில பொறியாளர் கவுன்சில் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

மாநில பொறியாளர் கவுன்சில் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

மாநில பொறியாளர் கவுன்சில் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

மாநில பொறியாளர் கவுன்சில் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

ADDED : அக் 24, 2025 02:22 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கோதை நகர் பொறியாளர் நலச் சங்கத்தின் சார்பில், எம்.எல்.ஏ மான்ராஜிடம் சங்க நிர்வாகிகள் முத்து முருகன், அழகர் ராஜ், தலைவர் கண்ணன், செயலாளர் காளித்தினம், பொருளாளர் ஆனந்தகுமார், நிர்வாகிகள் காளிபாஸ்கர் மனு அளித்தினர்.

இதில் குஜராத், கர்நாடகத்தில் உள்ளதுபோல் தமிழகத்திலும் பொறியாளர் கவுன்சில் அமைக்கவும், அனைத்து பொறியாளர்களின் பதிவுகளை மாநிலம் முழுதும் ஒரே பதிவு நடைமுறையை ஏற்படுத்தவும், பொறியாளர்களின் பதிவை ஒரு முறை பதிவு செய்தால் ஆயுட்காலம் வரை செல்லத் தக்க நடைமுறையை உருவாக்கவும், சுய சான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்குவதில் பொறியாளர்கள் வரைபடம் தயார் செய்து கையெழுத்திடும் நடைமுறையை மாற்றாமல் தொடரவும் வேண்டும் என்ற கோரிக்கைகளை சட்டசபையில் பேசி அரசின் கவனத்திற்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us