ADDED : அக் 02, 2025 03:13 AM
சத்திரப்பட்டி, : சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில்நவராத்திரி முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜையில் தலைவர் ஆறுமுகம், தாளாளர் பழனி குரு, துணைத் தலைவர் விமல் பங்கேற்று பூஜைகள் தொடங்கின. முதல்வர் நாகலட்சுமி, பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவியர் பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


