தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இ சேவை மையத்தில் சர்வர் பிரச்னை சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு

இ சேவை மையத்தில் சர்வர் பிரச்னை சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு

இ சேவை மையத்தில் சர்வர் பிரச்னை சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு


UPDATED : மே 15, 2026 05:29 PM

ADDED : மே 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 05:29 PM ADDED : மே 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி:காரியாபட்டி பகுதியில் இ சேவை மையத்தில் சர்வர் பிரச்னையால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வி சேர்க்கை தடைபடாமல் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு இ சேவை மையங்களில் சர்வரில் அடிக்கடி பிரச்னை இருந்து வருகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேர வருமானம், இருப்பிடம், சாதிச் சான்று பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இ சேவை மையங்களில் அடிக்கடி சர்வரில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். உயர்கல்வி சேர்க்கைக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. காலதாமதம் ஏற்பட்டால் சேர்க்கைக்கான வாய்ப்பு பறி போகுமா என்கிற அச்சத்தில் உள்ளனர். அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையை தீர்த்து, சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் .

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபடாத வகையில் இ சேவை மையங்களில் நிலவும் சர்வர் பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, வருவாய்த் துறையினர் நேரடியாக சான்றிதழ்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இ சேவை மையங்களில் நிலவும் சர்வர் பிரச்னை சரி செய்து, சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us