/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ராஜபாளையம் கோயில்களில் சனி பிரதோஷம் ராஜபாளையம் கோயில்களில் சனி பிரதோஷம்
ராஜபாளையம் கோயில்களில் சனி பிரதோஷம்
ராஜபாளையம் கோயில்களில் சனி பிரதோஷம்
ராஜபாளையம் கோயில்களில் சனி பிரதோஷம்
ADDED : மே 25, 2025 06:50 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்று வட்டார சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு பூஜை, அன்னதானம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயிலில் மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக நந்தி பகவானுக்கு மஞ்சள், தேன், இளநீர், கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம், அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில், சொக்கர் கோயில், பறவை அன்னம் காத்தருளிய சுவாமி, அருணாச்சலேஸ்வரர் கோயில், குருசாமி கோயில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.