/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி கடையடைப்பு டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி கடையடைப்பு
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி கடையடைப்பு
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி கடையடைப்பு
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி கடையடைப்பு
ADDED : செப் 24, 2025 06:17 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி வணிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே முக்கிய வியாபார தளமாக அம்பலபுளி பஜார் அமைந்துள்ளது. காய்கறி, ஓட்டல், மருந்தகங்கள், மருத்துவமனை, அச்சகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் 500க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கோயில்கள், தொடக்கப்பள்ளி, குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் இதன் மையப் பகுதி குருசுவாமி கோயில் அருகே அரசு டாஸ்மாக் கடை 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
24 மணி நேரமும் செயல்படும் இதை நாடும் மது பிரியர்களால் வணிகர்கள், குடியிருப்பு வாசிகள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்பட்டு வருவதால் இடமாற்றம் செய்யக்கோரி தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். அரசு செவி சாய்க்காததால் இதை கண்டித்து நேற்று வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் கோபால்சாமி, த.வெ.க., அ.தி.மு.க., ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின் டாஸ்மாக் கடை அகற்றப்படாத பட்சத்தில் தென்காசி ரோட்டில் மறியல் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.