Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

ADDED : மார் 09, 2026 07:43 AM


Google News
சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் ஏ.சி.ஐ.சி., - மெப்கோ புதுமையான அறக்கட்டளை, கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் இரு நாட்கள் புதிய மின்னணு சாதனங்களுக்கான மேம்பட்ட பொருட்களில் தொழில் முனைவோர் வாய்ப்புகள் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏ.சி.ஐ.சி.,- மெப்கோ புதுமையான அறக்கட்டளை மேலாளர் சிலம்பரசன் வரவேற்றார்.

சென்னை சத்யபாமா அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் நானோ அறிவியல் நானோ தொழில் நுட்ப மையம் இணை பேராசிரியர் முருகதாஸ், காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் உதவி பேராசிரியர் ராஜமோகன், சென்னை பல்கலை தேசிய நாளோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மையம் பிரகாஷ், காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஆராய்ச்சி அசோசியேட் டீன் ஹேமா, மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லுாரி மூத்த பேராசிரியர் ஜெயசுப்பிரமணியன் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us