/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு
வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு
வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு
வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு

தணியாத ஆர்வம்
சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள நர்சரியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததால் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் மரம் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது எனது வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் மரங்கள், செடிகளால் குளுமையான சூழல் நிலவுகிறது. என்னை பார்த்து மற்றவர்களும் மரங்கள் வளர்க்கின்றனர். அது மனதுக்கு சந்தோசமாக உள்ளது.
பறவைகள் ரம்மியம்
வீட்டின் அருகில் அடுத்தடுத்து மரங்கள் வளர்க்கப்படுவதால் ஏராளமான பறவைகள் மரங்களை தங்குகின்றன. காலை நேரத்தில் துாக்கணாங்குருவி, சிட்டுக்குருவி என பல்வேறு பறவைகள் கீச்சிடுவதால் அதிகாலை நேரத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஆனந்தா நகரில் பலர் தங்கள் வீடுகளுக்கு பின்னால் செம்பருத்தி, மல்லிகை ,ரோஜா , காட்டு ரோஜா என பல்வேறு செடிகளை வளர்த்து வருகின்றனர். மரம் வளர்ப்பதில் சத்திரப்பட்டி ஊராட்சி ஆனந்தா நகர் மக்கள் மற்ற பகுதி மக்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர்.


