ADDED : செப் 19, 2025 01:55 AM

சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் இந்திய கம்யூ., சார்பில் திருத்தங்கல் கண்ணகி காலனி எம்.ஜி.ஆர்., நகர் மக்களுக்கு பட்டா வழங்கிட கோரி குடும்பத்தோடு காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவா, மாநகர செயலாளர் சுரேஷ்குமார் பேசினர். தொடர்ந்து தாசில்தார் அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.