ADDED : ஜூன் 03, 2025 12:32 AM
சிவகாசி: உலக புகையிலை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார அலுவலர் குணசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் வைரகுமார் ஆலோசனையின்படி சிவகாசி ஜேசீஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியின் சுற்று வளாகத்தில் 300 அடி துாரத்திற்குள் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகம் எழுதப்பட்டது.
பள்ளி முதல்வர் சித்ரா ஜெயந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீர புத்திரன், சுகாதார ஆய்வாளர் ஷேக் முகமது கலந்து கொண்டனர்.