ADDED : பிப் 01, 2024 05:12 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் மாயக்கண்ணன், 25, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக விடுமுறைக்கு வந்தவர் ஜன. 16 ல், வேலைக்கு செல்கிறேன் என கூறிவிட்டு சென்றவர் மாயமானார். எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுக செல்வி, 48, இவரது கணவர் சூரிய நாராயணன், 50, இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஜன. 14 ல் வீட்டை விட்டு சென்றவர் காணவில்லை. பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.- -


