ADDED : அக் 10, 2025 03:03 AM

விருதுநகர்: விருதுநகரில் வடமலைக்குறிச்சி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து வீணாவதால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
சமீப நாட்களாக விருதுநகரின் நகர்ப்பகுதிகளில் அடிக்கடி குடிநீர் வீணாவது அரங்கேறி வருகிறது. தற்போது ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் அதிகரித்துள்ளது.
குடிநீர் பணிகளில் தரமற்ற குழாய் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அழுத்தம் காரணமாக தொடர்ந்து வெடித்து வருகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


