ADDED : அக் 02, 2025 03:34 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் ராமச்சந்திரன் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பல்வேறு துறைகள் நடத்திய முகாமில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. மின்வாரிய பெயர் மாற்றம், விவசாயிகளுக்கு பயிர் விதைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் உதவிகள் செய்யப்பட்டன. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதை பைகளை வழங்கினார்.
முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், நகரச் செயலாளர் மணி, நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


