ADDED : ஜூன் 03, 2025 12:36 AM
சாத்துார்: சாத்துார் அமீர்பாளையம் கவுரி 39, இவரது தாயார் ஜெயலட்சுமி 60. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சாத்துாரில் இருந்து கவுரி டூவீலர் ஓட்ட (ஹெல்மெட் அணிந்திருந்தார்)
பின்னால் ஜெயலட்சுமி (ஹெல்மெட் அணியவில்லை) உட்கார்ந்து வந்தார். அமீர்பாளையம் தீப்பெட்டி ஆலை அருகில் வந்த போது எதிரே சாத்துாரைச் சேர்ந்த தினேஷ் ராமன், ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் ஜெயலட்சுமி படுகாயம் அடைந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.