/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 02, 2025 06:28 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆட்டோ ஊர்வலம் நடந்தது. இவற்றை கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். முன்னதாக, விழிப்புணர்வுக்காக கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் யசோதாமணி, ஜெகவீரபாண்டியன் குணசேகரன், மருத்துவத்துறை இணை இயக்குனர் காளிராஜ், காசநோய் ஒழிப்புத்திட்டம் துணை இயக்குனர் ராஜன், எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.


