கொரோனா நிதியுதவி 1.64 லட்சம் பேருக்கு கிடைக்கவில்லை
கொரோனா நிதியுதவி 1.64 லட்சம் பேருக்கு கிடைக்கவில்லை
கொரோனா நிதியுதவி 1.64 லட்சம் பேருக்கு கிடைக்கவில்லை
ADDED : ஜூன் 30, 2024 01:14 AM

சென்னை: அரசின் தரவு தளத்தில் உள்ள சிக்கல் காரணமாக, கொரோனா காலத்தில், 1.64 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என, தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த, 2020ல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால், கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்திருந்தனர்.
அவர்களுக்கு பொருளாதார உதவியாக 2,000 முதல் 3,000 ரூபாய் வீதம் என, 12.14 லட்சம் தொழிலாளர்களுக்கு, 248.29 கோடி ரூபாயை நிதியுதவியாக தமிழக அரசு அறிவித்தது.
அதில், 10.50 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், அரசின் தரவுகளின் உள்ள சிக்கல்கள் காரணமாக, 1.64 லட்சம் பேர் என, 14 சதவீதம் தகுதியான தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிதியுதவி கிடைக்கவில்லை.
மேலும், 1,729 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிதியுதவி வழங்கப்பட்டதால், 33.31 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகியிருப்பது தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி
தமிழக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ், பதிவு பெற்ற ஒவ்வொரு நபரும், மாதந்தோறும் ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி படிவத்தை, அடுத்த மாதம் 20ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக படிவம் தாக்கல் செய்தால், நிலுவை தொகை மீது ஆண்டுக்கு, 18 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
அறிவிப்பு
பத்து மதிப்பீட்டு வட்டங்களின் தகவலை பகுப்பாய்வு செய்ததில், 19,634 பதிவுகளில் வரி விபர அறிக்கைகள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டு, அதன் விளைவாக வரி தாமதமாக செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால், வரித்தொகை மீது விதிக்கப்பட வேண்டிய வட்டி 35.38 கோடி ரூபாய். உரிய அதிகாரிகள் அவற்றை கண்டறிய தவறியதால், வட்டியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை, சுட்டிக்காட்டிய போது, 2022 செப்., மற்றும் நவ., இடையே, வரி செலுத்தியவர்களுக்கு அறிவிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2022 செப்., மற்றும் டிச., இடையே சுட்டிக்காட்டியதின் படி, 581 வரி செலுத்துவோருக்கு அறிவிப்புகள் அளித்து, 78 பேரிடம் இருந்து, 1.56 கோடி ரூபாயாக வட்டி பெறப்பட்டது என்று ஸ்ரீபெரும்புதுார் அதிகாரி கூறினார். ஆறு வட்டங்களில் இருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.