திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்
திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்
திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்
ADDED : ஜூன் 02, 2024 09:15 AM

துாத்துக்குடி : திருச்சியில் செயல்படும் சிவசக்தி அகாடமி சார்பில், உலக சாதனைக்காக 800 மாணவியர் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்செந்துார் பைரவர் கோவில் கடற்கரையில் நேற்று நடந்தது.
செந்தூர் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்துார் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 5 வயது முதல் 20 வயது வரையிலான மாணவிகள் முருகர் வேடமணிந்து கைகளில் வேல் ஏந்தியும், காவடியை சுமந்தும் 17 நிமிடத்தில் பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தனர்.
ஏசியா பசுபிக் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தினர் பரதநாட்டியத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு சாதனைக்கான சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் விருதினை வழங்கினர். ஒரே நேரத்தில் 800 பேர் பரதநாட்டியம் என்பது உலக சாதனைக்கான முயற்சி என திருச்சி சிவசக்தி அகாடெமி நிறுவனர் மீனா சுரேஷ் தெரிவித்தார்.