தூத்துக்குடி மீன்பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு; ஊழியர்கள் பாதிப்பு
தூத்துக்குடி மீன்பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு; ஊழியர்கள் பாதிப்பு
தூத்துக்குடி மீன்பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு; ஊழியர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 20, 2024 06:47 AM

தூத்துக்குடி: தூத்துக்குடி புதூர் பாண்டியபுரத்தில் உள்ள கடல் உணவுகளை பதப்படுத்தும் மீன்பதன ஆலையில் நேற்று(ஜூலை 19) இரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.