இந்தியாவுடன் நெருங்கிய உறவு: பாக்., துணை பிரதமர் இஷாக் விருப்பம்
இந்தியாவுடன் நெருங்கிய உறவு: பாக்., துணை பிரதமர் இஷாக் விருப்பம்
இந்தியாவுடன் நெருங்கிய உறவு: பாக்., துணை பிரதமர் இஷாக் விருப்பம்
UPDATED : ஜூன் 26, 2024 01:55 PM
ADDED : ஜூன் 26, 2024 10:46 AM

இஸ்லாமாபாத்: 'நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறோம்' என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கூறினார்.
இது குறித்து இஷாக் தார் கூறியிருப்பதாவது: இந்தியாவுடனான உறவு வரலாற்று ரீதியாக பிரச்னையாகவே உள்ளது. இந்தியாவுடன் நிரந்தர பகையை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறோம்.
பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம் மற்றும் நீண்டகால ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு நியாயமான மற்றும் அமைதியான முறையில் தீர்வு வேண்டும். ஒருதலைப்பட்ச அணுகுமுறைகளை பாகிஸ்தான் ஒரு போதும் ஏற்காது. சீனா பாகிஸ்தானின் மிகவும் நம்பகமான நண்பர். இவ்வாறு அவர் கூறினார்.
தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலியுறுத்திய இஷாக் தார், ‛‛ வறுமை, வேலையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை பேரழிவுகள், சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்த்துப் போராடுவதை விட விவேகமானதாக இருக்கும்'' என்றார்.