மணல் மாமூல் வசூலால் போலீசார் கூண்டோடு மாற்றம்: திருச்சி எஸ்.பி., அதிரடி
மணல் மாமூல் வசூலால் போலீசார் கூண்டோடு மாற்றம்: திருச்சி எஸ்.பி., அதிரடி
மணல் மாமூல் வசூலால் போலீசார் கூண்டோடு மாற்றம்: திருச்சி எஸ்.பி., அதிரடி
ADDED : ஜூன் 23, 2024 07:49 AM

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் தினமும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. இதற்கு, 'நம்பர் - 1' டோல்கேட், கொள்ளிடம் போலீசார் உடந்தையாக உள்ளனர் என, நம் நாளிதழில் 21ம் தேதி டீக்கடை பெஞ்ச் பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்த, திருச்சி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார். விசாரணையில், கொள்ளிடம் போலீசார் மணல் கடத்தல்காரர்களிடம் தொடர்பில் இருந்ததும், மாமூல் வாங்கி பங்கிட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த 23 போலீசாரில், எஸ்.ஐ., மணிகண்டன் தவிர, 22 போலீசாரை நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார். இது, திருச்சி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.