திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
UPDATED : ஜூன் 08, 2024 09:24 PM
ADDED : ஜூன் 08, 2024 07:24 PM

சென்னை: சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தமிழகத்தின் திட்டங்கள் , உரிமைகளுக்கு தொடர்ந்து அயராது குரல் கொடுப்போம் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
5 தீர்மானங்கள்
தமிழகத்தின் திட்டங்கள்,உரிமைகளுக்கு தொடர்ந்து அயராது குரல் கொடுப்பது.
ஜூன் 14 ல் கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படும்.
நிதி உரிமை மற்றும் மொழி உரிமை குறித்து பார்லி.யில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவோம்.
பார்லிமென்ட் வளாகத்தில் அகற்றப்பட்ட தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி. நீட் தேர்வு வேண்டாம் என கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பா.ஜ.,பெறவில்லை, பலவீனமான பா.ஜ. அரசை நமது முழக்கம் மூலம் பா,ஜ.,வை செயல்பட வைக்க வேண்டும். அந்த கடமை உங்களுக்கு உள்ளது. பாஜவிற்கு சரிசமாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் இருக்கப் போகிறார்கள். பார்லியை ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழ்நாட்டிற்கும் எனக்கும் திமுக எம்.பி்க்கள் பெருமையை சேர்க்க வேண்டும்.
வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு திமுக எம்பி்க்கள் உண்மையாக இருக்க வேண்டும். தொகுதி மக்களை சந்திக்க எம்.பிக்கள் நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு சில மாநில தேர்தல் முடிவுகள் மாறி இருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளதால் மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்ற எச்சரிக்கையுடன் திமுக எம்.பிக்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.