ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி
ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி
ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி
ADDED : ஜூலை 02, 2024 03:29 AM
சென்னை : பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய, ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி அளித்துள்ளது.
ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.,யாக முருகன் பணிபுரிந்தார். இவர், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில், 2018ல், இணை இயக்குனராக பணிபுரிந்த போது, பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது. அவர் பணி நிறைவு செய்ததால், நேற்று முன்தினத்துடன் ஓய்வு பெற அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.