Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?: அண்ணாமலை கண்டனம்

முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?: அண்ணாமலை கண்டனம்

முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?: அண்ணாமலை கண்டனம்

முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?: அண்ணாமலை கண்டனம்

ADDED : ஜூலை 25, 2024 04:21 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ' தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருக்கு அரசு பதவியா?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர்.

தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள்.ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் முதல்வர் ஸ்டாலின் இருந்திருக்கிறார்.

துஷ்பிரயோகம்

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை மற்றும் துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

முதல்வர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us