தி.மு.க.,வுக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம்: இ.பி.எஸ்., பேட்டி
தி.மு.க.,வுக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம்: இ.பி.எஸ்., பேட்டி
தி.மு.க.,வுக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம்: இ.பி.எஸ்., பேட்டி
UPDATED : ஜூலை 14, 2024 01:45 PM
ADDED : ஜூலை 14, 2024 10:23 AM

வேலூர்: தி.மு.க.,வுக்கு ஆட்சி அதிகாரமும், இண்டியா கூட்டணியும் தான் முக்கியம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணபலம், அதிகார பலத்தால் தி.மு.க., வென்றுள்ளது. விவசாயிகள், தமிழக மக்களை பற்றி தி.மு.க.,வுக்கு அக்கறையில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல வேண்டிய அவசரம் என்ன?. ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சந்தேகம் உள்ளது.
ஆட்சி அதிகாரம்
கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது தி.மு.க.,வுக்கே கவலையே இல்லை. கூட்டணி தான் முக்கியம் என்பதற்காக காவிரி நீர் பெறுவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை. கர்நாடக அரசு உரிய நீரை வழங்க வேண்டும். தி.மு.க.,வுக்கு ஆட்சி அதிகாரமும், இண்டியா கூட்டணியும் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.