10 நாள் முன்பே 'நீட்' தேர்வு முடிவு: மருத்துவ விண்ணப்பம் எப்போது?
10 நாள் முன்பே 'நீட்' தேர்வு முடிவு: மருத்துவ விண்ணப்பம் எப்போது?
10 நாள் முன்பே 'நீட்' தேர்வு முடிவு: மருத்துவ விண்ணப்பம் எப்போது?
UPDATED : ஜூன் 10, 2024 11:03 AM
ADDED : ஜூன் 10, 2024 07:12 AM

திருப்பூர் : 'நீட்' தேர்வு முடிவு கள் பத்து நாள் முன்பே வெளியானதால், மருத்துவக்கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்பம், கவுன்சிலிங் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹாேமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தேர்வுகள் முகமை மூலம் மருத்துவ நுழைவு தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு 'நீட்' தேர்வு மே 5ம் தேதி நடந்தது. நாடு முழுதும், 24 லட்சம் பேரும், தமிழகத்தில், 1.5 லட்சம் பேரும் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், முன்னறிவிப்பின்றி, லோக்சபா தேர்தல் முடிவு வெளியான 4ம் தேதி இரவோடு இரவாக வெளியிடப்பட்டது.
பத்து நாள் முன்பே முடிவு வெளியானதால், மருத்துவக்கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்பம், கவுன்சிலிங் எப்போது என்பது குறித்த ஐயப்பாடுகள் மருத்துவக் கனவுடன் காத்திருக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் எழுந்துள்ளது.
'நடப்பு வாரத்தில் தான் அகில இந்திய அளவிலான மருத்துவ விண்ணப்பம், கவுன்சிலிங் குறித்த தகவல்கள் வெளியாகும். அதற்கேற்பவே மாநில அளவிலான கவுன்சிலிங் நடைமுறை, அடுத்த கட்ட அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது,' என, உயர்கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.