Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறையில் திருநங்கைக்கு 'தொல்லை': எஸ்.பி., - டி.ஐ.ஜி., துாக்கியடிப்பு

சிறையில் திருநங்கைக்கு 'தொல்லை': எஸ்.பி., - டி.ஐ.ஜி., துாக்கியடிப்பு

சிறையில் திருநங்கைக்கு 'தொல்லை': எஸ்.பி., - டி.ஐ.ஜி., துாக்கியடிப்பு

சிறையில் திருநங்கைக்கு 'தொல்லை': எஸ்.பி., - டி.ஐ.ஜி., துாக்கியடிப்பு

ADDED : ஜூலை 17, 2024 06:50 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: திருச்சி, அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில், திருச்சியைச் சேர்ந்த சாரங்கன், 32, என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் சி.பி., - 1 தனிச்சிறையில், சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர், சாரங்கனை அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்; இது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில், சாரங்கன் புகார் அளித்தார்.

சுப்புராமன் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்தது. திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், 11ம் தேதி உத்தரவிட்டார்.

இரு நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., ஜெயபாரதியை வேலுார் பயிற்சிப் பள்ளிக்கு டி.ஐ.ஜி.,யாகவும், கண்காணிப்பாளர் ஆண்டாளை, திருச்சி பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பாளராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் கிடப்பில் போட காரணம்


நான்கு மாதங்களுக்கு முன், சென்னையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றலாகி வந்த மாரீஸ்வரன், சென்னையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தவரின் வீட்டிலும், பின், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்தில் உள்ள அதிகாரியிடமும் வேலை பார்த்துள்ளார். அந்த செல்வாக்கை வைத்தே, மாரீஸ்வரன் மீதான புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் புகாரை கண்டுகொள்ளாமல் இருக்க, 50,000 ரூபாய் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us