ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? : திடுக் பின்னணி
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? : திடுக் பின்னணி
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? : திடுக் பின்னணி
UPDATED : ஜூலை 06, 2024 02:27 PM
ADDED : ஜூலை 06, 2024 11:17 AM

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதில், திருநெல்வேலி கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நேற்று (ஜூலை 5) இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆறு பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கமாக ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி வைத்து இருப்பார். நேற்று இரவு காரில் துப்பாக்கியை வைத்திருந்த போது, ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ராங்கிடம் துப்பாக்கி இல்லை என்பதை கண்காணித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பழிக்குப் பழி கொலையா?
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், திருநெல்வேலியில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
8 பேரிடம் விசாரணை
ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ டிரைவர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.