செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் முழு கொள்ளளவை எட்டிய 15 ஏரிகள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் முழு கொள்ளளவை எட்டிய 15 ஏரிகள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் முழு கொள்ளளவை எட்டிய 15 ஏரிகள்
ADDED : அக் 21, 2025 06:05 PM

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அதில் 15 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.
அதில்
* 56 ஏரிகள் 90 சதவீதமும்
* 224 ஏரிகள் 75 சதவீதமும்
* 402 ஏரிகள் 40 சதவீதமும் நிரம்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஏரிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


