ஊரகப்பகுதிகளில் குப்பை சேகரிக்க 15,000 மின் ஆட்டோக்கள்
ஊரகப்பகுதிகளில் குப்பை சேகரிக்க 15,000 மின் ஆட்டோக்கள்
ஊரகப்பகுதிகளில் குப்பை சேகரிக்க 15,000 மின் ஆட்டோக்கள்
ADDED : செப் 17, 2025 12:06 AM
சென்னை:ஊரகப் பகுதிகளில், வீடுகளில் சேரும் குப்பையை, தரம் பிரித்து சேகரிப்பதற்காக, 15,000 மின் ஆட்டோக்கள் வாங்க, ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
தமிழகம் முழுதும், நகர்ப்புற உள்ளாட்சிகளில், துாய்மைப் பணியாளர்கள், மின் ஆட்டோக்களில் வீடு தோறும் சென்று, வீடுகளில் சேரும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி, குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
ஊரக உள்ளாட்சியை பொறுத்தவரை, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பல ஊராட்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. பல ஊராட்சிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்களிடம் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது.
நாடு முழுதும் குப்பையை தரம் பிரித்து சேகரிக்க, மத்திய ஊரக வளர்ச்சி துறை அறிவுறுத்தி உள்ளது. எனவே, தமிழகத்தில் எஞ்சியுள்ள ஊராட்சிகளிலும், குப்பையை தரம் பிரித்து சேகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குப்பை சேகரிப்பு பணிக்காக, 15,000 மின் ஆட்டோக்கள் வாங்க, ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கையை துவக்கி உள்ளது.


