Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்

2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்

2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்

2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்

UPDATED : செப் 01, 2025 12:54 PMADDED : செப் 01, 2025 12:53 PM


Google News
Latest Tamil News
2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை நிச்சயம் 200ஐக் கடந்துவிடும். நேற்றுடன் முடிந்த 8 மாதங்களில் இதுவரையில் 175 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. ஓடிடியில் ஒரே ஒரு படம் வெளிவந்துள்ளது.

8 மட்டுமே வெற்றி


இந்த 175 படங்களில் ‛‛மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி'' ஆகிய 8 படங்கள்தான் வசூல் ரீதியாக லாபகரமான வெற்றி படங்களாக அமைந்துள்ளன. மற்ற 167 படங்கள் தோல்விப் படங்கள் என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல். வெற்றி சதவீதம் என்பது 10 சதவீதம் கூட இல்லாதது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.

Image 1463490

பல படங்கள் எதற்காக தயாரிக்கப்படுகின்றன என்பது புரியாத புதிர். அந்தப் படங்கள் ஒரு நாளாவது ஓடுகிறதா என்பது கேள்விக்குறி. சில படங்களுக்கு டிரைலர்களைக் கூட வெளியிடுவதில்லை. சில படங்களுக்கு செய்திகளைக் கூட யாருமே தருவதில்லை. சில படங்கள் வெளியான இரண்டு நாட்களிலேயே நன்றி அறிவிப்பு, வெற்றி அறிவிப்பு என சந்திப்புகளை நடத்துகிறார்கள்.

விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத படங்களை 'பெய்டு விமர்சனம்' மூலம் தரமான படம் என விளம்பரப்படுத்துகிறார்கள். இப்படியான நிலைமை இந்த 2025ம் ஆண்டில் அதிகமாகவே உள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 157 படங்கள் வெளியாகின. அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கூடுதலாக 18 படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024ல் மொத்தமாக 234 படங்கள் வெளியாகி இருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை மிஞ்சிவிடும் என்றே சொல்லலாம். எப்படியும் 250 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us