Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது

ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது

ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது

ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரூ.15,000 லஞ்சம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் கைது

ADDED : அக் 10, 2025 07:21 PM


Google News
Latest Tamil News
சேலம் : ரேஷன் அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல். இரு மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால், சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் என்று, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு 'மாதந்தோறும், 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' என கூறியுள்ளனர்.

பணம் தர விரும்பாத சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வழிகாட்டுதல்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட, 15,000 ரூபாயை, கொண்டலாம்பட்டியில் வைத்து ஏட்டு ராஜலட்சுமியிடம், 36, நேற்று மதியம் கொடுத்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் ராமராஜன், 50, எஸ்.ஐ.,க்கள் சரவணன், 37, ராமகிருஷ்ணன், 38, ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அலுவலகத்தில் இருந்த மூவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us