லஞ்சம் வாங்கியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
ADDED : செப் 26, 2025 02:27 AM
சென்னை:சொத்து ஆவணத்தில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வது தொடர்பாக, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாவட்ட உதவி கலெக்டர் அலுவலக தற்காலிக ஊழியருக்கு, நான்கு ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவர், தன் மருமகன் பெயரில் சொத்து ஆவணம் பதிவு செய்தார். ஆவணத்தில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வது தொடர்பான விண்ணப்பம், மதுரை மாவட்ட, முத்திரை தாள் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த அலுவலகத்தில், தற்காலிக ஊழியராக இருந்த ரஹ்மான், விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில், 2015ல், கதிரேசன் புகார் அளித்தார். இதையடுத்து, அவரிடம் இருந்து, ரஹ்மான் லஞ்சப் பணத்தை வாங்கிய போது கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தகுதியான ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ரஹ்மானுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 4000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.