தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை
தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை
தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை
ADDED : ஜூன் 12, 2025 02:32 AM

மதுரை: மதுரையில் 8ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை இழந்தவர். வீட்டு வேலைகளை செய்து இரு மகன்கள், 14 வயது மகளை படிக்க வைத்து வருகிறார்.
அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு வரை இவரது மகளுடன் படித்த மாணவி ஒருவர், வேறு ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்து படித்து வருகிறார்.
சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாக இருந்ததால், அந்த மாணவி சேர்ந்த பள்ளியிலேயே தன்னையும் சேர்த்துவிடுமாறு தாயாரிடம் மகள் கூறிவந்தார். 'அந்த பள்ளியில் சேர்த்தால் கல்விக்கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். என்னால் செலவழிக்க முடியாது' என தாயார் சமரசம் செய்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 14 வயது மகள் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.