வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு!
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு!
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

சென்னை: வங்கக் கடல் பகுதியில் இன்று (மே 27) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று (மே 27) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.