விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு
விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு
விஜயதசமியில் சேர்க்கை: பள்ளிகளுக்கு உத்தரவு
ADDED : செப் 26, 2025 10:17 PM
சென்னை:'விஜயதசமி நாளில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவ -- மாணவியருக்கான, இரண்டாம் பருவ புத்தகங்களை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.
அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், விஜய தசமி நாளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேர்க்கை விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்திலும், இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


