லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு ஆலோசனை
லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு ஆலோசனை
லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு ஆலோசனை
ADDED : ஜூன் 05, 2025 03:12 AM
சென்னை: 'லோக் ஆயுக்தா' அமைப்பு, தமிழகத்தில் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக உள்ளார்.
இரண்டு நீதித்துறை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த உறுப்பினர் பதவியை நிரப்புவது தொடர்பாக, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சபாநாயகர் அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர் ராஜமாணிக்கம், மனிதவள மேலாண்மை துறை செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கம்போல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பங்கேற்கவில்லை.


