Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ த.வெ.க.,வுடன் கூட்டணியா? பிரேமலதா சொன்ன பதில்

த.வெ.க.,வுடன் கூட்டணியா? பிரேமலதா சொன்ன பதில்

த.வெ.க.,வுடன் கூட்டணியா? பிரேமலதா சொன்ன பதில்

த.வெ.க.,வுடன் கூட்டணியா? பிரேமலதா சொன்ன பதில்

ADDED : ஜூன் 09, 2025 01:35 PM


Google News
Latest Tamil News
கரூர்: எதிர்வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுடன் கூட்டணியா என்பது குறித்த கேள்விக்கு தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம், தமிழகத்தில் ரூ.36,000 கோடி ஊழல் நடந்ததாக மத்திய உள்துறை அமித் ஷா குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது; மக்கள் பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். ஆனால், தமிழகத்தில் எப்போதும் பார்த்தாலும் கூட்டணி மற்றும் தேர்தலை பற்றியே பேசுகின்றனர்.

கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. மணல் கொள்ளை மிகவும் மோசமாக நடக்கும் மாவட்டமாக கரூர் உள்ளது. இன்றைக்கும் கூட லாரிகள் பிடித்து வைக்கப்பட்டது. அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி விற்பனை செய்தால், எதிர்கால சந்தததிக்கு இந்த அரசுகள் என்ன விட்டுச் செல்கின்றனர் என்பது மிகப்பெரிய கேள்வி.

இரவு, பகல் பார்க்காமல் 24 மணிநேரமும் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. பழைய பஸ் ஸ்டான்ட், புதிய பஸ் ஸ்டான்ட் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. பழைய பஸ் ஸ்டான்டை விரிவாக்கம் செய்தால், அது கரூர் மக்களுக்கு நிச்சயம் நல்லதாக இருக்கும்.

த.வெ.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணியா என்பதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். 2026ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போது தான் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும், எனக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us