பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
ADDED : ஜன 16, 2024 11:27 PM

பழநி : பழநி முருகன் கோயிலில் பொங்கல் விடுமுறை காரணமாக வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல்விழா தொடர் விடுமுறை காரணமாக இக்கோயிலுக்கு நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
பாதயாத்திரையாக வந்தவர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் மையங்களிலும் பல மணிநேரம் காத்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் வழிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.


